வேலூர் மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
வேலூர் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் மின்னனு வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 அறைகளில் தலா 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஏ.சி.சண்முகம், கதிர் ஆணந்த், தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேலூர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதற்கான முன்னிலை நிலவரம் சற்று நேரத்தில் தெரியவரும்.