வேலூர்:  கைதிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: கைதிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: கைதிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மத்திய சிறை உட்பட கிளை சிறையில் உள்ள 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்திய சிறை மற்றும் வேலூர் சரகத்திற்குட்பட்ட திருப்பத்தூர், போளூர் உள்ளிட்ட கிளை சிறையில் உள்ள 8 கைதிகளுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூர் பெண்கள் தனிச்றையில் 3 கைதிகளுக்கும், திருப்பத்தூர், போளூர் கிளை சிறைகளில் தலா 2 கைதிகளுக்கும், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஒரு கைதிக்கும் என இதுவரை மொத்தம் 8 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்த 8 கைதிகளில் 4 பேர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் சிறைவாசிகள் கொரோனா தொற்றால் பாதிக்காத வகையில் முதல்கட்டமாக 100 பேருக்கும், இரண்டாம் கட்டமாக 150 பேருக்கு என சுமார் 250 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com