வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சம்பத்துராயன்பேட்டையில் பழமையான ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சம்பத்துராயன்பேட்டையில் பழமை வாய்ந்த பெருமாள் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், ராதா, ருக்குமணி, வேணுகோபால் சாமி சிலைகளை திருடிச்சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றும் 40 கிலோ முதல் 120 கிலோ வரை எடைகொண்டவையாகும். இவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நூற்றுக்கணக்கான கடத்தப்பட்ட சிலைகளை, சிலை கடத்ததல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் சிலை திருட்டு தலைதூக்கியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அப்பகுதி போலீசார் சிலை தடுப்பு போலீசாரிடம் தகவல் அளித்துள்ள நிலையில், விரைவில் சிலையை கடத்திய மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.