\
வேலூர்:  கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட இருந்த ரூ.10 கோடி பறிமுதல் - 4 பேர் கைது

வேலூர்: கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட இருந்த ரூ.10 கோடி பறிமுதல் - 4 பேர் கைது

வேலூர்: கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட இருந்த ரூ.10 கோடி பறிமுதல் - 4 பேர் கைது
Published on: 

பள்ளிகொண்டா அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீசார்;, ஹவாலா பணமா என விசாரணை மேற்கொண்டள்ளனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய காவலர்கள் நேற்று இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த காவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பண்டலை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில், கட்டுக் கட்டாக பணம் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் சுமார் 10 கோடி ரூபாய் பணத்தையும் காரையும் பறிமுதல் செய்த காவலர்கள் 4 பேரை கைது செய்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் வைத்து ஹவாலா பணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com