\
வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் சுட்டெரித்த சூரியன் !

வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் சுட்டெரித்த சூரியன் !

வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் சுட்டெரித்த சூரியன் !
Published on

தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் இன்று முதல் வட தமிழகப் பகுதிகளில் வெப்பம் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது இரவு புயலாக வலுப்பெறும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில் நாளை மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் முதலில் வடமேற்கு திசையில் பின் வடக்கு வடகிழக்கு திசையில் நகரும். இந்தப் புயலுக்கு உம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். 20-ஆம் தேதி மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று வேலூர் 104.72, தொண்டி 102.2, தருமபுரி 101.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருக்கிறது. மேலும் கடலூர், திருத்தணி, புதுச்சேரியில் தலா 101.12 டிகிரியும், சேலம் 100.5, அதிராம்பட்டினம் பரங்கிப்பேட்டை 100.4 டிகிரி செல்சியஸாக வெயில் பதிவாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com