\
படுக்க இடம் பிடிப்பதில் பிச்சைக்காரர்களிடம் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை

படுக்க இடம் பிடிப்பதில் பிச்சைக்காரர்களிடம் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை

படுக்க இடம் பிடிப்பதில் பிச்சைக்காரர்களிடம் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை
Published on: 

இரவில் படுப்பதற்கு இடம் பிடிப்பதில் பிச்சைக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை. காவல் துறையினர் விசாரணை.

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத பிச்சைக்காரர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த பிச்சைக்காரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடியவரை தேடி வருகின்றனர். இதையடுத்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் வழக்கமாக காட்பாடி பேருந்து நிறுத்தத்தில் இறவில் உறங்கும் இரு பிச்சைக்காரர்களுக்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் இதில், ஒரு பிச்சைக்காரர் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்ததாகவும் காவல் தூறையினர் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com