தமிழ்நாடு
வேலூர் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிப்பு
வேலூர் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிப்பு
வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அப்போது பணம் பறிமுதல் தொடர்பாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

