வேலூர் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்

வேலூர் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்
வேலூர் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த வெற்றியை நெருங்கியுள்ளார்.

வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி யில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார். அதை அடுத்தும் அவர் முன்னிலையில் இருந்தார்.
நான்கு சுற்று வரை முன்னிலையில் இருந்த சண்முகம் பின்னர் இறங்கு முகமானார்.

(ஏ.சி.சண்முகம்)

பின்னர் இருவரும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னும் பின்னுமாக சென்றுகொண்டிருந்தனர். சிறிது நேரத் தில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றார். தொடர்ந்து அவர் முன்னிலை பெற்றுகொண்டே இருந்தார். இறுதியில் அவர் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட கதிர் ஆனந்த் 8500-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுக தொண்டர்கள், தங்கள் மகிழ்ச்சியை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com