\
வேலூர் மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவு

வேலூர் மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வேலூர் மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Published on

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கொரோனா நோயாளிகள் உள்பட 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக மருத்துவ கல்வி இயக்குனருக்கும், மருத்துவ கல்லூரி டீனுக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், ராஜேஸ்வரி மற்றும் பிரேம் ஆகியோர் உயிரிழந்தனர். இதேபோல ராஜேந்திரன், மதன், லீலாவதி, கபாலி ஆகிய ஆகிய 4 நோயாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழிலில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com