\
வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை : திமுக முன்னிலை 

வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை : திமுக முன்னிலை 

வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை : திமுக முன்னிலை 
Published on

வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார். 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் அதிமுகவின் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து இரண்டாவது சுற்றில் 34,052 வாக்குகள் பெற்று 1541 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com