வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு
வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியத்திற்கு பின் விறுவிறுப்படைந்தது. மாலை 5 மணி வரை 62.94 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு நிறைவுக்கு பின் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறித்த விவரங்கள் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும்.

வேலூர் மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் வரும் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றை தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com