தமிழ்நாடு
‘வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்’ - முதல்வர் பழனிசாமி
‘வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்’ - முதல்வர் பழனிசாமி
திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை சென்னை கோட்டைக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் காலை 9 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 2 புதிய மாவட்டங்கள் சேர்க்கப்படுவதால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது.