\
வேலூர்: விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த சிறுத்தை – வனத்துறையினர் விசாரணை

வேலூர்: விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த சிறுத்தை – வனத்துறையினர் விசாரணை

வேலூர்: விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த சிறுத்தை – வனத்துறையினர் விசாரணை
Published on: 

வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த சிறுத்தையை மீட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அடுத்த சாரங்கள் வனப் பகுதியை ஒட்டி துரைசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பெரிய சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் பேர்ணாம்பட் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பேர்ணாம்பட் சரக வனத்துறையினர், உயிரிழந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com