தண்டனை கைதி தப்பியோட்டம்
தண்டனை கைதி தப்பியோட்டம்pt desk

வேலூர் | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தண்டனை கைதி தப்பியோட்டம்!

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தண்டனை கைதி தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு யாசகம் எடுப்பவரை கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவர் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 15ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாபு ஷேக் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தண்டனை கைதி தப்பியோட்டம்
திருப்பத்தூர் | நிலத்தகராறில் தாய்மாமனை வெட்டிக் கொலை செய்த மருமகன் - போலீசார் விசாரணை

இதுகுறித்து சிறைத் துறையினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தப்பிச் சென்றவரை சிறை துறையினரும், போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com