வேலூர்: ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள்

வேலூர்: ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள்

வேலூர்: ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள்
Published on

வேலூர் அருகே ஆபத்தை உணராமல் பேருந்தின் படியில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் செல்கின்றனர். இதனால் அதிக பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வரை செல்லும் தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் முன்பக்க படிக்கட்டு மற்றும் பின்புற படியிலும் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் கூட பேருந்து ஓட்டுநர் அவர்களை தடுத்து நிறுத்தி வேறொரு பேருந்தில் வரும்படி கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு மாணவர்கள் படியில் தொங்கி செல்வதை பார்த்தும் ஓட்டுநர் பேருந்தை இயக்குவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது என்றும் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com