“மக்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும்” - வேலூர் மாவட்ட ஆட்சியர் 

 “மக்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும்” - வேலூர் மாவட்ட ஆட்சியர் 
 “மக்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும்” - வேலூர் மாவட்ட ஆட்சியர் 

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தமது வாக்கினை பதிவு செய்தார். 

வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்திரம் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், “இளம் வாக்காளர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். 1553 வாக்குச்சாவடி மையங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் வாக்குப் பதிவு சென்று கொண்டிருக்கிறது. நியாயமான முறையில் தேர்தல் நடப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பூத் சிலீப் ஓட்டளிக்க கட்டாயம் கிடையாது. தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை நிர்ணயித்துள்ளது. அதில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். நாட்டிற்கு செய்யவேண்டிய கடமையை செய்ய வேண்டும். எந்த வித தூண்டுதல்களுக்கும் மக்கள் இடம் தரக்கூடாது. சுந்ததிரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும். வேலூர் மாவட்டம் முழுக்க விழிப்புணர்வு பேரணி நடத்தியுள்ளோம். 

இளம் வாக்காளர்கள் 22 சதவீதம் உள்ளனர். எப்போதும் வேலூர் மக்களவை தொகுதியில் 75 சதவீதம் பதிவாகும். இந்த முறையும் அதற்கு குறையாமல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. துணை ராணுவப்படையினர் 1200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com