வேலூர்: மிளகாய் பொடியை தூவி நகைக்கடை ஊழியரிடம் 50 சவரன் நகை, ரூ.9 லட்சம் வழிப்பறி

குடியாத்தம் அருகே மிளகாய் பொடியை தூவி நகைக்கடை ஊழியர்களிடம் 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vehicle check
Vehicle checkpt desk

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ரவாரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். குடியாத்தம் சந்தப்பேட்டை நகைக்கடை பஜார் பகுதியில் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் இவர், நகைக் கடைகளில் இருந்து நகைகளை வாங்கி வெவ்வேறு நகை கடைகளுக்கு கொண்டு சென்று வழங்குவதும் அதற்கான தொகையை வசூலிப்பதும் வழக்கம்.

Police station
Police stationpt desk

அப்படி சமீபத்தில், ரங்கநாதன் தனது உறவினர் அன்பரசன் என்பவரை அழைத்துக் கொண்டு வழக்கம் போல் பரதராமி பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு சென்று நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு பரதராமில் இருந்து குடியாத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு புறப்பட்டுள்ளார்.

அப்போது குடியாத்தம் சித்தூர் சாலையில் குட்லவாரிபள்ளி அருகே சென்ற அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி அவர்களிடம் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Police
Police pt desk

இது குறித்து ரங்கநாதன் பரதராமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பரதராமி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com