கஞ்சா பறிமுதல்file
தமிழ்நாடு
வேலூர்: வடமாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல்
வேலூர்: வடமாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தியாளர்: ச.குமரவேல்
டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயில், காட்பாடி அருகே வந்தபோது ரயில்வே காவல் துறையின் சிறப்பு குழுவினர் ரயிலில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு டிராவல் பைகளை ஆய்வு செய்துள்ளனர்.
Trainpt desk
அதில் 24 பண்டல்களில் சுமார் 25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.