வேலூர்: மினி லாரியின் அடியில் சிக்கி உயிர்பிழைத்த சிறுவன்-வீடியோ

வேலூர்: மினி லாரியின் அடியில் சிக்கி உயிர்பிழைத்த சிறுவன்-வீடியோ

வேலூர்: மினி லாரியின் அடியில் சிக்கி உயிர்பிழைத்த சிறுவன்-வீடியோ
Published on

சாலையை கடக்க முயன்றபோது மினி லாரியின் அடியில் சிக்கிய சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியில் நரேஷ் என்ற 6 வயது சிறுவன் சாலையை கடந்துள்ளான். அப்போது அவ்வழியாக ஜல்லி ஏற்றி வந்த மினி டிப்பர் லாரி சிறுவன் மீது மோதியது. அங்கு இருந்தவர்கள் பதட்டத்துடன் வந்து பார்த்தபோது சரக்கு லாரிக்கு அடியிலிருந்து சிறுவன் தலைதெறிக்க ஓடியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. சிறுவனுக்கு என்னவாகியிருக்குமோ என அஞ்சியவர்கள் அவன் ஓடுவதைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com