பிடிக்க வந்தவர் மீது சீறி சீறி பாய்ந்த 12 அடி நீள மலைப்பாம்பு!

பிடிக்க வந்தவர் மீது சீறி சீறி பாய்ந்த 12 அடி நீள மலைப்பாம்பு!

பிடிக்க வந்தவர் மீது சீறி சீறி பாய்ந்த 12 அடி நீள மலைப்பாம்பு!
Published on

விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த 12அடி நிலமுல்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடித்த சேர்க்காடு பெரிய மிட்டூர் கிராமப்பகுதியில் முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பெரிய அளவிலான மலைப்பாம்பு இருப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட, ஆற்காடு சரக வனச்சரகர் கந்தசாமிக்கு விவசாயி முனிரத்தினம் தகவல் அளித்தார்.

அதனடிப்படையில் வனத்துறையினரும் விலங்கியல் நல ஆர்வலர் கார்த்திக் என்பவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். மேலும் மீட்க்கபட்ட மலைப்பாம்பை வனத்துறையினரும் விலங்கியல் ஆர்வலர் கார்த்திக் ஆகியோர் மண்டலம் காப்பு காட்டில் விடுவித்தனர் .12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com