\
திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
Published on

திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக மாற்ற வேண்டும். ஆசியாவிலேயே சிறந்த ரயில் போக்குவரத்து, தொழிற்சாலைகள், எல்லா நிலையிலும் தண்ணீர் பஞ்சமே இல்லாத மாவட்டம் திருச்சி மாவட்டம். தொலைநோக்கு பார்வையுடனே எம்.ஜி.ஆர் திருச்சியை தலைநகர் ஆக்க வேண்டும் என விரும்பினார். கருணாந்தி எதிர்ப்பு தெரிவித்ததாலும் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை ஒத்துழைக்காததாலும் திட்டம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் கனவுத்திட்டம் இது. இதுசம்பந்தமாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் பேசி எம்.ஜி.ஆரின் கனவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர்கள் உதயக்குமார் மற்றும் செல்லூர் ராஜூ மதுரையை 2-வது தலைநகராக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது திருச்சியை அறிவிக்க வேண்டும் என வெல்லமண்டி நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com