தமிழ்நாடு
பக்தர்களின்றி வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத்திருவிழா தேர்பவனி
பக்தர்களின்றி வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத்திருவிழா தேர்பவனி
பிரசித்திபெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியதேர் பவனி பக்தர்களின்றி நடைபெற்றது.
கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று தேர்பவனி நடைபெற்றது. வழக்கமாக பெரிய தேர் பவனியின் போது ஏழு சப்பரங்கள் வரிசையாக நின்று அணிவகுத்துச் செல்லும். தற்போது மைக்கேல்சமணஸ், சூசையப்பர், ஆரோக்கியமாதா உள்ளிட்ட 5 சப்பரங்கள் மட்டுமே பேராலயத்தை சுற்றி பவனி வந்தன. தேர்பவனியை சமூக வலைதளங்கள் மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாளை மாலை கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

