drown in the seapt desk
தமிழ்நாடு
வேளாங்கண்ணி: சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு
வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிலம்பாட்டம் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. அதில் பங்கு பெறுவதற்காக திண்டுக்கல்லில் இருந்து 45 மாணவ மாணவியர் வந்துள்ளனர். இந்நிலையில், வேளாங்கண்ணி கடற்கரைக்குச் சென்ற மாணவர்கள், கடலில் குளித்துள்ளனர்.
Silambampt desk
அப்போது கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிலுக்குவார்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்த மாணவரும், வீரமலை என்ற மாணவரும் சடலமாக கரை ஒதுங்கினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார், இரு உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.