சென்னையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
சென்னையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது. பனிமூட்டத்தால் சாலைகள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது. நேற்று இரவு முதலே கடுமையான பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். சாலைகள் சரியாக தெரியாததால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரவிருந்த சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து புறப்படவிருந்த சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இன்னும் சில நாட்கள் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com