தமிழ்நாடு
பொதுமுடக்கம்: சென்னையில் 11 காய்கறி தொகுப்பு ரூ.105-க்கு விற்பனை
பொதுமுடக்கம்: சென்னையில் 11 காய்கறி தொகுப்பு ரூ.105-க்கு விற்பனை
சென்னையில் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நேரடியாக கூட்டுறவு துறையின் சார்பில் கொள்முதல் செய்து காய்கறி வழங்குவதால் குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்படுகிறது.
இதுபோக, நகர் முழுவதும் 1610 காய்கறி வாகனங்கள் வியாபாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை தரப்பில் காய்கறிகளை விநியோகம் செய்யபடுகிறது. வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் உட்பட 11 காய்கறிகள் சேர்ந்த தொகுப்பு 105 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. காய்கறி வண்டிகள் மண்டல வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.
வீடுகளுக்கே சென்று காய்கறிகள் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தொடக்கி வைத்தார்.