நெல்லையில் பன்மடங்கு குறைந்த காய்கறிகள் விலை - மக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் பன்மடங்கு குறைந்த காய்கறிகள் விலை - மக்கள் மகிழ்ச்சி
நெல்லையில் பன்மடங்கு குறைந்த காய்கறிகள் விலை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பொதுமுடக்கம் அறிவித்த நாளன்று கிலோ 120 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 15 ரூபாய் என குறைந்திருக்கிறது. பல்லாரி கிலோ 30 ரூபாய் என விற்கப்படுகிறது. காய்கறிகள் ஒவ்வொன்றும், தளர்வுகளுடன் தொடங்கிய ஊரடங்கு முதல் நாளில் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

தளர்வுகளுடன் ஊரடங்கு இன்று முதல் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நெல்லை மாநகரில் அரசு அறிவித்துள்ள கடைகள் மட்டும் காலையிலேயே திறக்கப்பட்டன. 

நெல்லை டவுண் நைனார் குளம் சந்தை மாற்றப்பட்டு சாப்டர் பள்ளி மைதானத்தில் செயல்படுகிறது. காய்கறிகள் அனைத்தும் விற்பனைசெய்யும் 65 கடைகள் இங்கு இயங்குகின்றது. காலை 4 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்.  ஒட்டன்சத்திரம் மதுரை போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் நேரடியாக இங்கு விற்பனைக்கு இறக்குமதி செய்யப்படுவதால் விலை மிக குறைவாக இருக்கும்.

லாக்டவுன் ஆரம்பித்த நாளன்று தக்காளி கிலோ 120 ரூபாய்க்கும் பல்லாரி 80 ரூபாய்க்கும், கேரட் 160 ரூபாய்க்கும், பீன்ஸ் 250 ரூபாய்க்கும் என ஒவ்வொன்றும் விலையில் இமாலய சாதனை தொட்டிருந்தது. ஊரடங்கு தளர்வு ஆரம்பித்த இன்று முதல் நாள் காய்கறிகள் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தக்காளி கிலோ 15 ரூபாய்க்கும்,  கேரட் 40 ரூபாய்க்கும், பல்லாரி 30 ரூபாய்க்கும் என ஒவ்வொரு காய்கறிகளும் விலை பன்மடங்கு குறைந்துள்ளது. 

மேலும் காய்கறி கடைகள் இறைச்சி கடைகள் காலை 10 மணிவரை என்றிருந்த நேரம் மாறி மாலை 5 மணி வரை நேரம் நீட்டிக்கபட்டுள்ளதால் மக்கள் அவர்கள் நேரத்திற்கு ஏற்ப வந்து வாங்கிக் கொள்கிறார்கள்.  இதன் காரணமாக கூட்டமாக மக்கள் நிற்பது தவிர்க்கப்பட்டுள்ளது.  எனவே சமூக விலகலுடன் மாஸ்க் அணிந்து குறைந்த விலையில் காய்கறிகளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

- நாகராஜன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com