\
சென்னையில் காய்கறி வியாபாரியை தாக்கி வழிப்பறி !

சென்னையில் காய்கறி வியாபாரியை தாக்கி வழிப்பறி !

சென்னையில் காய்கறி வியாபாரியை தாக்கி வழிப்பறி !
Published on

சென்னையில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அதிகாலை காய்கறி வியாபாரியை தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி பக்கிரி சாகிப் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (50). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வழக்கமாக பாரிமுனை வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் சென்று தங்களுடைய பகுதியில் விற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், அதேபோல இன்று காலை காய்கிறி வாங்குவதற்காக புறப்பட்டுள்ளார்.

அப்போது, சங்கர் காய்கறிகளை வாங்க டிரை சைக்கிளில் பாரிமுனை அரசு பல் மருத்துவ கல்லூரி அருகே செல்லும் போது 6 பேர் கொண்ட கும்பல் சங்கரிடம் செல்போன், ரூ. 2,200 வழிமறித்து கொள்ளையடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத 6 பேர் வழிப்பறி செய்வது தெரிந்தது. அதனை வைத்து போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com