\
தந்தம் கடத்தல் வழக்கு: வீரப்பன் விடுதலை

தந்தம் கடத்தல் வழக்கு: வீரப்பன் விடுதலை

தந்தம் கடத்தல் வழக்கு: வீரப்பன் விடுதலை
Published on: 

தந்தம் கடத்தல் வழக்கில் இருந்து மறைந்த வீரப்பன் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 2000-ஆம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகளான பெரியகுளம் சண்முகம், ராஜேந்திரன், ஜவஹர் ஆகியோர் 12 யானை தந்தம், ஒரு நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் அதிரடி படையினரால் பிடிபட்டனர்.  இதுகுறித்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கே.குமார சிவம், போதிய சாட்சியம் இல்லாததாலும் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினாலும் 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் 7-வது குற்றவாளியான வீரப்பன் இறந்து விட்டதால் அவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com