சென்னை மாநகர் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வீராணம் ஏரி !

சென்னை மாநகர் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வீராணம் ஏரி !
சென்னை மாநகர் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வீராணம் ஏரி !

சென்னை மாநகரின் தண்ணீர் தட்டுபாட்டை குறைக்கும் முக்கிய ஏரியாக வீராணம் ஏரி உருவெடுத்துள்ளது.  

பருவமழை பொய்த்துபோனால் கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும். இந்த முறை தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தண்ணீருக்கான போராட்டம் பல இடங்களில் தொடங்கியுள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை மிகவும் குறைந்த அளவிலேயே இருந்ததால் சென்னை மாநகரில் இம்முறை தண்ணீர் தட்டுபாடு அதிகமாகவே  இருக்கும் எனக் கணிக்கடப்பட்டது. 

இந்நிலையில் சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்கும் முக்கிய ஏரியாக வீராணம் ஏரி உருவெடுத்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் உள்ள பழைமையான ஏரி வீராணம். இந்த ஏரி சோழர் கால மன்னர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஏரியின் மொத்த கன அளவு 1,465 மில்லியன் கன அடியாகும். வழக்கமாக வீராணம் ஏரி சென்னையின் 35% தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் இம்முறை சென்னை நகரில் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் அதனை அரசு எவ்வாறு தீர்க்கப்போகிறது என மக்களிடம் அதிக ஏதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. 

இந்தத் தண்ணீர் தட்டுபாட்டை போக்க தமிழ்நாடு அரசு வீராணம் ஏரியிலுள்ள தண்ணீர் பயன்படுத்தப் போவதாக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மேட்ரோவாட்டர் பொறியாளார் ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்க்கு சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில்“இம்முறை வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வந்துள்ளது. இதனால் வீராணம் ஏரி இந்தாண்டு இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. சென்னை மாநகருக்கு ஒரு நாள் தண்ணீர் தேவை 0.5 மில்லியன் கன அடியாக உள்ளது. இதனை சமாளிக்க வீராணம் ஏரியிலிருந்து 70% தண்ணீரை எடுக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு எடுத்தால் சென்னை மாநகருக்கு அடுத்த 200நாட்களுக்கு தண்ணீர் வழங்க முடியும். அத்துடன் நெமிலியில் உள்ள கடல் நீரை சுத்திகரிக்கும் மையம் மூலம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com