\
வீரன் சுந்தரலிங்கனார் 252-வது பிறந்தநாள் விழா: எம்பி.கனிமொழி தலைமையில் அமைச்சர்கள் மரியாதை

வீரன் சுந்தரலிங்கனார் 252-வது பிறந்தநாள் விழா: எம்பி.கனிமொழி தலைமையில் அமைச்சர்கள் மரியாதை

வீரன் சுந்தரலிங்கனார் 252-வது பிறந்தநாள் விழா: எம்பி.கனிமொழி தலைமையில் அமைச்சர்கள் மரியாதை
Published on

வீரன் சுந்தரலிங்கனார் 252-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்பி தலைமையில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனாரின் 252 வது பிறந்தநாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கவர்னகிரியில் அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு திமுக எம்பி கனிமொழி தலைமையில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் கனிமொழி எம்பி பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கர நாராயணன் மக்கள் செய்தி தொடர்பாளர் ஜெகவீரபாண்டியன் ஒட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com