வேதாரண்யம்: ரசாயனம் தடவி பதப்படுத்தப்பட்ட 200 கிலோ மீன்கள் பறிமுதல்

வேதாரண்யம்: ரசாயனம் தடவி பதப்படுத்தப்பட்ட 200 கிலோ மீன்கள் பறிமுதல்
வேதாரண்யம்: ரசாயனம் தடவி பதப்படுத்தப்பட்ட 200 கிலோ மீன்கள் பறிமுதல்

வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் விற்பனைக்கு வைத்திருந்த ரசாயனம் தடவிய 200 கிலோ எடையுள்ள கடல் மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள், மாட்டுப் பொங்கலன்று இறந்த முன்னோர்களுக்கு அசைவ உணவை குறிப்பாக கடலில் கிடைக்கும் மீன்களை வைத்து படையல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கோடியக்கரை வேதாரண்யம் தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் கடல் மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் தோப்புத்துறை மீன்மார்க்கெட் அருகில் சாலையோரத்தில் மீன்கள் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ரசாயனம் தடவப்பட்டு பல நாட்களாக பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மீன்கள் விற்பனை செய்யப்படும் பகுதியில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராயனம் தடவப்பட்ட 200 கிலோ எடையுள்ள மீன்களை பறிமுதல் செய்து மீன் விற்பனையாளர்களை எச்சரித்து அனுப்பினர்.இதையடுதத்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் கடற்கரை அருகே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com