\
வேடந்தாங்கல் சரணாலயம் நாளை திறப்பு

வேடந்தாங்கல் சரணாலயம் நாளை திறப்பு

வேடந்தாங்கல் சரணாலயம் நாளை திறப்பு
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாளை திறக்கப்படுகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இங்கு, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 16 வகையான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. இந்த சாரணாலயம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூனில் மூடப்பட்டு, அக்டோபர் அல்லது நவம்பரில் திறக்கப்படும். 
இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்காக நாளை காலை 6 மணி முதல் திறக்கப்படுவதாகவும், மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com