\
தமிழக தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமனம்

தமிழக தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமனம்

தமிழக தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு ஐஏஎஸ் நியமனம்
Published on: 

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு ஏற்கெனவே தமிழகத்தில் பரிச்சயமானவர். 1988ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகை ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். சுற்றுலாத்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். மேலும் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியும் வகித்துள்ளார். 2019லிருந்து அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்து வருகிறார்.

தற்போது தமிழக தலைமைச் செயலாளராக உள்ள ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உதயசந்திரன் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com