தமிழ்நாடு
டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி போராட்டம்: 9 விசிக பெண்கள் கைது
டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி போராட்டம்: 9 விசிக பெண்கள் கைது
மதுரையில் டாஸ்மாக் மதுக்கடையை சேதப்படுத்தியதாக 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கூடல் நகர் பகுதியிலுள்ள அஞ்சல் நகரில் ஏற்கனவே 3 மதுக்கடைகள் உள்ள நிலையில் மேலும் ஒரு மதுக்கடையை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மதுக்கடை ஒன்றை பெண்கள் அடித்து நொறுக்கினர். இதையடுத்து பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.