6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்

6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்

6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
Published on

6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் என விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திமுக 6 தொகுதிகள் ஒதுக்கினால் ஏற்கக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கமிட்டனர். சென்னையில் உள்ள விசிக கட்சி அலுவலகம் வெளியே அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும், 6 தொகுதிகளை ஏற்க மாட்டோம் எனவும் அவர்கள் முழக்கமிட்டனர். கட்சி தொண்டர்களிடத்தில் பேசிய திருமாவளவன் கட்சி தலைமையின் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்பட வேண்டுமென வலியுறுத்தினார். இதனையடுத்து திமுக உடனான 2ம்கட்ட பேச்சுவார்த்தைக்கு விசிக தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயம் செல்கிறார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com