’இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது’ - விருது வழங்கும் விழாவில் திருமாவளவன் சரமாரி பேச்சு!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அம்பேத்கர் சுடர் விருது முன்னாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம், மார்க்ஸ் மாமணி விருது தமிழ்தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பெரியார் ஒளி விருது நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ” பெரியார் பிற்படுத்தப்பட்ட தலைவர் அம்பேத்கர் தலித் மக்களுக்கான தலைவர் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் இருவருமே ”ஜாதி ஒழிப்பு” என்றுதான் இயக்கினார்கள். இங்கு அம்பேத்காரிய வாதிகள் பெரியாரிய வாதிகள் மார்க்ஸிய வாந்திகளை ஒரு மேடையில் அமர்த்தி உள்ளோம். இதன் தாக்கத்தை அடுத்து வரும் காலங்களில் பார்க்க முடியும். கருத்தியல் ஆளுமையின் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிமிர்ந்து நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில் இடதுசாரி பார்வை தேவை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி நினைக்கிறது. எல்லோரும் தேர்தல் கணக்கு போடும்பொழுது நான் மட்டும் தேசப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறேன். அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும். மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
இந்து சமயம் என்ற மதம் கிடையாது
விடுதலை சிறுத்தைகள் கட்சி 234 தொகுதிகளுக்கு இணையானது. தகுதியானவர்கள். பாஜகவை தேர்தலுக்காக எதிர்க்கவில்லை அவர்கள் உயர்த்தி பிடிக்கும் மதசார்பு நோக்கத்திற்காக எதிர்க்கிறோம். நாட்டில் அமையும் அரசு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும். பாஜக அரசியல் அமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கிறது. உலகில் அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாத நிலையில் இருப்பது இந்தியாவில் உள்ள ஜாதிய கட்டமைப்புதான்.
இந்து மதம் என்ற ஒரு மதம் கிடையாது. ஆறு மதங்களை ஒருங்கிணைந்து இந்து மதம் உருவானது. சைவம், வைணவம், முருகர், கணபதி, சூரியன், சக்தி அப்படி ஆறு மதம் இருந்தது. அதனை இணைத்து இந்து மதம் உருவாக்கினார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இந்து மதம் வந்தது. இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்ட மதமாக இருக்கிறது. உலகில் உள்ள மற்றப் மதங்களில் சகோதரத்துவம் கொண்டு இருக்கிறது.
திருநீரை அழித்தது பற்றி பேசுகிறார்கள்... மேல்பாதிக்கு மேல் என்னை கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா?
திருநீரை அழித்தது பற்றி பேசுகிறார்கள்.. மேல்பாதியில் கோயிலுக்குள் போக முடியவில்லை. என்னை கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா?.. நோன்புக்கு போனால் தொப்பி கொடுத்தார்கள். அதனை சிறிது நேரம் கழித்து எடுத்து விடுகிறோம். அணிந்து கொண்டே இருக்க முடியுமா? நான் புண்ணியம் கிடைக்கும் என்று திருநீறு பூசிக் கொள்ளவும் இல்லை.. அதனை அவமதிக்க வேண்டும் என்று நான் அழிக்கவும் இல்லை..
என் தாய்க்கு கொடுக்கும் மதிப்பை மக்களுக்கு கொடுக்கிறேன். அதனால்தான் அவர்கள் திருநீறு வைத்தால் ஏற்றுக் கொள்கிறேன். முருகன் மாநாடு அரசியலுக்காக ஓட்டுக்காக நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் முருகன் பக்தர்கள் மட்டும் தான் இருக்கிறார்களா..? ஐயப்ப பக்தர்கள் அதை விட அதிகமாக இருக்கிறார்கள். முருகனை முதலில் அவர்கள் ஏற்க மாட்டார்கள்.
பிராமணர்கள் யாராவது முருகன் என்று பெயர் வைத்தது உண்டா?
முருகன் புராணம் கதை கிடையாது. பிராமணர்கள் யாராவது முருகன் என்று பெயர் வைத்தது உண்டா? முருகனை சுப்பிரமணியர் என்று மாற்றிவிட்டார்கள். இல்லை என்றால் ஸ்கந்தன் என்று பெயர் வைப்பார்கள். முருகன் என்று அவர்கள் பெயர் கூட வைக்க மாட்டார்கள். குறிஞ்சி திணைக்களத்தின் தலைவன் முருகன்.. முருகன் தமிழன் என்றால் சிவன் தமிழன் பார்வதி தமிழச்சி என்று தானே இருக்க வேண்டும். சிவன் கைலாயத்தில் இருக்கிறார். அப்படி என்றால் இமயமலை வரை தமிழருடையது... அதனை அவர்கள் ஒப்புக் கொள்வார்களா..? எங்கள் இயக்கம் சட்டமன்றத்துக்கு நாடாளுமன்றத்துக்கு சீட் பேசும் இயக்கம் கிடையாது. தேர்தலில் போட்டி போடவில்லை என்று கூட அறிவித்துவிடுவேன்.
ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
கொள்கைதான் முக்கியம். சேரில் அமர வைப்பது கூட இங்கு பேசுபொருளாக இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளின் கை வைக்கிறது. அரசியல் அமைப்பை நீர்த்துப்போக செய்கிறது. இன்று சத்தியராஜ் பேசி இருக்கிறார், ஜாதி ஒழிப்பே தமிழ் தேசியத்தின் அடிப்படை என்று.. ஜாதி ஒழிப்பு சகோதரத்துவத்துக்கு அடிப்படை... இதனை நான் எனது தொடக்க காலத்திலேயே பேசிவிட்டு.. .ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று எனது தொடக்கத்தில் பேசியது. சத்யராஜுக்கு அதேபோன்ற ஒரு சிந்தனை தோன்றியிருக்கிறது.
முருகன் பக்தர்கள் மாநாடு கிடையாது. அது மோடி பக்தர்கள் மாநாடு
பெரியாரை எதிர்த்து தமிழ் தேசியம் பேசுபவர்கள் போலி தமிழ் தேசியம் பேசுகிறார்கள்.(சீமான்). அதிமுக அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் கூட்டணி சேர்த்து உள்ளது. அதிமுக மிகப்பெரிய தவறை செய்கிறார்கள். சங் பரிவாரத்துக்கு வேலை செய்யும்.. தொண்டர்களாக அதிமுக இருக்கிறது. திருச்சியில் நடந்தது முருகன் பக்தர்கள் மாநாடு கிடையாது. அது மோடி பக்தர்கள் மாநாடு.
பெரியார் இழிவுபடுத்தும் கூட்டத்தில் அதிமுக..
ஆர்எஸ்எஸ் கூட்டத்துக்கு செல்லும் அளவுக்கு அதிமுக மாறி இருக்கிறது. பெரியார் இழிவுபடுத்தும் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். நான் திமுக கூட்டணியில் இருந்தால் இப்படி பேசவில்லை. அதிமுக ஒரு திராவிட இயக்கம் என்று நம்புவதால் இதனை பேசுகிறேன். பெரியார் போன்ற தலைவரை இழிவுபடுத்துவதை எப்படி அதிமுக அனுமதிக்கிறது. ஜெயலலிதா சொன்னார் மோடி உடன் இனி இணைந்து செயல்பட மாட்டேன் என்று... ஆனால், அதனை அதிமுக காப்பற்றியதா? எம்ஜிஆர் ஆர்எஸ்எஸ்கர்களை எச்சரித்தார். விமர்சித்தார். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கிறது. பாஜக மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிறார்கள்.. சமூக பிளவினவாதம் நடக்கிறது. அதனை தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனால்தான் கூட்டணியில் இருக்கிறோம். திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அது..
அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி
மதசார்பற்ற என்ற கோட்பாட்டை உள்ளடக்கி இருக்கிறது. அந்தக் கூட்டணி எங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆனால், அதிமுக அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் கருத்துகள் ரதியாக சனாதன சக்திகளை எதிர்க்கக்கூடிய அரசியலை விடுதலை சிறுத்தைகள் செய்கிறது. அதிமுக தற்போது வரலாறு பிழை செய்கிறது. மத சார்பு கொள்கை உள்ளவர்களை உள்ளே விடுகிறது.
எங்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் செய்து காட்டுவோம்
மதசார்பற்ற நிலையை காப்பாற்ற தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் செயல்படும். என்னைப் பொறுத்தவரையில் கல்வியும் மருத்துவமும் இலவசமாக கிடைக்க வேண்டும். முதலில் புதுச்சேரியில் முதல் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பவரை அனைவருக்கும் இலவசமாக கொண்டு வர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தால் அதனை செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்காக தமிழகத்திலும் ஆராய்ச்சி படிப்பவரை அனைவருக்கும் இலவச மன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது எங்களது நோக்கமாகும். எங்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் செய்து காட்டுவோம்.” என்று திருமாவளவன் பேசியுள்ளார்.