\
திருமாவளவன் - இன்பதுரை - மு.க.ஸ்டாலின்
திருமாவளவன் - இன்பதுரை - மு.க.ஸ்டாலின்கோப்புப்படம்

அதிமுக நிர்வாகிக்கு பதில் கொடுத்த விசிக தலைவர் திருமாவளவன்... முதல்வர் போட்ட பதிவு!

“திருமாவளவன் நம்மோடுதான் இருப்பார்” என அதிமுக நிர்வாகி இன்பதுரை கூறியுள்ளார். அதற்கு, “விசிக எப்போதும் மக்களோடுதான் இருக்கும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
Published on

“திருமாவளவன் நம்மோடுதான் இருப்பார்” என அதிமுக நிர்வாகி இன்பதுரை கூறியுள்ளார். அதற்கு, “விசிக எப்போதும் மக்களோடுதான் இருக்கும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். இந்த சூழலில், “திருமாவளவன் உள்ளத்தை நான் அறிவேன்” எனக்கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ள நிலையில் கூட்டணி குறித்த யூகங்கள் அவ்வப்போது பேசுபொருளாகி வருகின்றன. இந்த வரிசையில் சென்னையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை பேசியது பேசுபொருளாகியுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களை கைவிடக்கோரி சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் பேசிய இன்பதுரை, “திருமாவளவன் நம்மோடுதான் இருப்பார்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “எங்கள் கட்சி எப்போதும் மக்களுடன்தான் இருக்கும்” என விளக்கம் அளித்தார் .

திருமாவளவன் - இன்பதுரை - மு.க.ஸ்டாலின்
2026 சட்டமன்ற தேர்தல்| ”தருமபுரியில் விஜய் போட்டியிடுவார் ..” - மாவட்ட தலைவர் சொன்ன தகவல்!

அதிமுக, விசிக கூட்டணி குறித்த பேச்சுகளுக்கு மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திமுகவின் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், "சகோதரர் திருமாவளவன் உள்ளத்தை நான் அறிவேன். மூத்த சகோதரராக உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன், எனது செயல்பாடுகளை அறிவார்” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com