\
மு.க.ஸ்டாலின் - திருமாவளவன்
மு.க.ஸ்டாலின் - திருமாவளவன்முகநூல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சந்திக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Published on

இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற முழக்கத்துடன் மதுஒழிப்பு மாநாடு நடத்தப்படும்’ என்ற திடீர் அறிவிப்பை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சமீபத்தில் வெளியிட்டது.

அத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்க அதிமுக மற்றும் விஜய் கட்சிக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் இருக்கும் போதே மதுவிலக்கு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மு.க.ஸ்டாலின் - திருமாவளவன்
“ஆட்சியில் பங்கு கேட்பது நியாயமான ஒன்று; திருமாவளவன் கருத்துக்கு 100 சதவீதம் ஆதரவு” – ஹெச்.ராஜா

இத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நேரத்தில், ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என திருமாவளவன் பேசிய வீடியோ வெளியானது. அது அரசியல் வட்டாரத்தில் மேலும் பேசுப்பொருளானது. இந்நிலையில் இன்று முதல்வரை சந்திக்க இருக்கிறார் எம்.பி., திருமாவளவன். பல சலசலப்புகளுக்கு பின்னரான சந்திப்பு என்பதால், இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com