\
ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக தொண்டர்கள் சாலை மறியல்

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக தொண்டர்கள் சாலை மறியல்

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக தொண்டர்கள் சாலை மறியல்
Published on

திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்த இந்து முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி ரூபாய் என்று அறிவித்தவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். 

திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா-வை கைது செய்யக்கோரியும் போரட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை போலிசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com