திரைத்துறையில் கமலை விட சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ? - ரவிக்குமார் கேள்வி
திரைத்துறையில் நடிகர் கமல்ஹாசனை விட சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளரும், எம்.பி-யுமான ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைத்துறையில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கோல்டன் ஜூப்ளி என்ற சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக மத்திய அரசுக்கு பதிலுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஜினிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தலைமுறையில் கருத்து தெரிவித்துள்ள ரவிக்குமார், “நடனக்கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் கமல்ஹாசன். இவரை விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.