கள்ளநோட்டு அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டதாக புகார்.. விசிக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தில், விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவரின் விவசாய நிலத்தில், ஒரு கும்பல் கள்ளநோட்டு அச்சடிப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
விசிக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
இதையடுத்து, திடீரென அங்கு சென்ற காவல் துறையினரைக் கண்டதும், அங்கிருந்த கும்பல் தப்பியோடியது. சோதனையிட்ட ஈடுபட்ட காவல் துறையினர், 85 ஆயிரம் ரூபாய் அளவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். மேலும், 4 வாக்கி
டாக்கிகள், லேப்டாப், ஏர்கன், பிஸ்டல், கவுண்டிங் மெஷின், பிரிண்டிங் மெஷின், பேப்பர் பண்டல், காவல் துறை சீருடை, போலி ஆர்பிஐ முத்திரை உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.
இதனிடையே, அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணி, மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.