\
“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை

“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை

“திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா” - திருமா கோரிக்கை
Published on

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார். கருணாநிதியின் மறைவுக்கு தமிழக, தேசிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் உடலுக்கு திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அரசியல், சமூகம், கலை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும். அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடமளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com