”கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?” - திருமாவளவன் கேள்வி

”கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?” - திருமாவளவன் கேள்வி

”கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?” - திருமாவளவன் கேள்வி
Published on

கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா என்பதனை சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் "தமிழ்நாட்டில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும் அதைக் குறைத்துக் காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வருகிற செய்திகள் உண்மைதானா என்பதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்" எனக் கேட்டுள்ளார்.

மேலும் அவர் "கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்னையில் அரசு மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப் படவில்லை என்ற புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள் கொரோனா சோதனை செய்து விட்டு வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று நோயாளிகளைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மக்களுடைய அழுத்தத்தினாலும், எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களின் காரணமாகவும் தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் இப்பொழுது தமிழக அரசால் வரைமுறை படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை" என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் " கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் அதனால் உயிரிழப்பு என்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதே அரசு சார்பில் சொல்லப்படும் சமாதானமாக இருக்கிறது. இதனால் மக்களும் பயத்திலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர். மேற்கொள்ள வேண்டிய எந்த முன்னெச்சரிக்கையையும், கட்டுப்பாடுகளையும் மக்கள் மேற்கொள்ளாமல் போவதற்கு அரசே பொறுப்பாகும். உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற வாதத்தை மெய்ப்பிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள் என்று சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன" தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com