\
“டெல்லி கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு” - விசிக வலியுறுத்தல்

“டெல்லி கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு” - விசிக வலியுறுத்தல்

“டெல்லி கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு” - விசிக வலியுறுத்தல்
Published on

இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசை வலியுறுத்தி 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும், வெறுப்புப் பிரசாரத்தைத் தடுக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com