டாஸ்மாக்கை சுடுகாட்டுல திறக்கணும்: எம்.எல்.ஏ ஐடியா
தமிழக அரசு, மதுபானக்கடையை குடியிருப்பு பகுதிக்குள் திறப்பதற்குப் பதில் சுடுகாட்டில் திறக்க வேண்டும் என்று நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கூறியுள்ளார்
திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர்பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர்
வசந்தகுமார் துவக்கி வைத்தார். பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் மதுகடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம்என்பது பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. இப்படி மக்களின் எதிர்ப்பை மீறி தமிழக அரசு மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறப்பதற்குப்பதில், சுடுகாட்டில் திறந்தால் நல்லதாக இருக்கும் என்றும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு அங்கேயே இருந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடு மோசமாக இருக்கும் இந்தச் சூழலில் மத்திய அரசு அசுர
பலத்துடன் இருப்பதால் தமிழக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.

