குன்னூர் பேருந்து விபத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!

குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானது.இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
குன்னூர்  பேருந்து விபத்து
குன்னூர் பேருந்து விபத்துபுதிய தலைமுறை

பிரதமர் மோடி இரங்கல்

குன்னூரில் சுற்றுலா பேருந்து விபத்துக்கு உள்ளானதை அடுத்து அதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில் ,

” இந்த நிகழ்வு வேதனையை அளிக்கின்றது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். குன்னூரில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரனம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50, 000 வழங்கப்படும்.” என்று தனது x வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

இது குறித்து மு.க. ஸ்டாலின் கூறுகையில்,” விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாயும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் , லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயையும் நிவாரண நிதியாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் .” என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

”விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பா.ஜ.க சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் , ”விபத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைய இறவனை பிராத்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com