தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கோவையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டையில் அல்ட்ரா டெக் நிறுவனம் சிமென்ட் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளது. கோவை, செங்கல்பட்டு, விருதுநகரில் டால்மியா நிறுவனம், சிமென்ட் அரைத்தல் ஆலையை தொடங்க உள்ளது. கிருஷ்ணகிரியில் மின் வாகனங்கள் ஆலையை டிவிஎஸ் மோடார் நிறுவனம் அமைக்க உள்ளது.
வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு ரூ. 485 கோடியில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. கோவையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள வான்வெளி, பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேட்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்த திறன்மிகு மையமும் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com