விடுப்பு எடுத்து விஏஓக்கள் போராட்டம்

விடுப்பு எடுத்து விஏஓக்கள் போராட்டம்

விடுப்பு எடுத்து விஏஓக்கள் போராட்டம்
Published on

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் மடி கணினிகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் 254 வட்டங்கள் மற்றும் 16,710 வருவாய் கிராமங்கள் உள்ளன. அரசு, புறம்போக்கு நிலங்களை பராமரிப்பதிலும் அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதிலும் விஏஓக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நிலம், வருவாய்த்துறை தொடர்பான ஆவணங்களை பராமரித்தல் நில அளவை மேற்கொள்ளுதல் பேரிடர் மீட்பு, பிறப்பு, இறப்பு, சாதி, வருவாய் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ் வழங்குதல் ஊராட்சிகளுடன் இணைந்து இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விஏஓக்கள் செய்து வருகின்றனர்.

நிலம் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான விவரங்களை ஆவணங்கள் மூலமாக பாதுகாத்து வருவதால் அவற்றை பராமரிப்பது விஏஓக்களும் பெரும் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு 2011 ஆம் ஆண்டு நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் விஏஓக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ரூ.15.95 கோடியில் விஏஓக்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் பல கிராம நிர்வாக அலுவலகங்களில் மின் இணைப்பு வசதி இல்லாததால் லேப்டாப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட விஏஓக்கள் குற்றம்சாட்டினர். இணையதள வசதி செய்து கொடுக்காமல் வெறும் லேப்டாப் மட்டும் வழங்குவதால் எந்த பலனும் இல்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு வழங்கிய மடிக்கணினியில் இணையதள வசதி இல்லை என்றும், வருவாய்த்துறை ஆவணங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் புகார் கூறினர். இன்று விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், நாளை மறுநாள் சென்னையில் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். வேலூர், நெல்லை, கரூர், உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com