தமிழ்நாடு
சான்றிதழ் கொடுக்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ (வீடியோ)
சான்றிதழ் கொடுக்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ (வீடியோ)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கப்பலூர் மற்றும் சடையமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி, சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. சீனிவாசன் என்ற அலுவலரிடம் , ஒருவர் முகவரிச் சான்றிதழ் கேட்டு வந்துள்ளார். அதனை வழங்க வேண்டுமெனில், லஞ்சம் தர வேண்டும் என்று சீனிவாசன் கேட்டுள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை அடிப்படையாக வைத்து கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.