வந்தவாசி: பாட்டுபாடி தடுப்பூசி போட அழைத்த மருத்துவ பணியாளர்கள்

வந்தவாசி: பாட்டுபாடி தடுப்பூசி போட அழைத்த மருத்துவ பணியாளர்கள்
வந்தவாசி: பாட்டுபாடி தடுப்பூசி போட அழைத்த மருத்துவ பணியாளர்கள்

நூதன முறையில் பாட்டுபாடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைத்த மருத்துவ பணியாளர்கள் குறித்து சமுக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

தமிழகமெங்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வந்தவாசியை அடுத்த தழுதாழை, கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு மக்களை வரவேற்கும் விதமாக துணை செவிலியர்கள் வீதி வீதியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வித்தியாசமான முறையில் பாட்டு பாடி அழைப்பு விடுத்தனர்.

தடுப்பூசி குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடைபெற்று வரும் நிலையில், மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள், துணை செவிலியர்கள் ஆகியோர் வித்தியாசமான முறையில் கோவாக்சின், கோவி சீல்டு, ஊசி என பாடல்பாடி அழைப்பு விடுத்தது வந்தவாசி பகுதிகளில் சமுக வலைதளங்களில் வெகுவாக பரவி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com